Header Ads



மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 119 அரசாங்க ஊழியர்களுக்கு வீடமைப்புக் கடன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை 'ஜனசெவன' 10இலட்சம் வீட்டுத்திட்டத்தின் ஓர் அங்கமான அரசாங்க ஊழியர்களுக்கான 'உபகார' வேலைத்திட்டத்தின் கீழ்  நிர்மாணத்துறை ,பொறியியல் சேவைகள் ,வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில்  வீடமைப்புக் கடன் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக 'உபகார' வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 70.5மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 119 அரசாங்க ஊழியர்களுக்கு 48.5மில்லியன் ரூபா பெருமதியான வீடமைப்பு கடன் வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட கொடுப்பனவுப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக ஒன்று கூடல் மண்டபத்தில்  மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,மக்கள் வங்கி உத்தியோகத்தர் பத்மநாதன்,பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொன்.ரவீந்திரன்,வீடமைப்பு திட்ட அதிகாரசபை ஊழியர்கள்,பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.