பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நவாஸ் செரீப் பிரதமர் ஆனார். இதையடுத்து அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் நிதிஉதவி அளிக்கும்படி அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அது குறித்து பரிசீலித்த அமெரிக்கா பாராளுமன்றம் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க ஒப்புதல் அளித்தது.
எனவே, பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
வருகிற புதன்கிழமை (23–ந்தேதி) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச இருக்கிறார். இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி உதவியை அறிவித்துள்ளது.
Post a Comment