நீச்சல் தடாகத்தில் குளித்த 10 வயது சிறுவன் வபாத்

உயிரிழந்த சிறுவன் முகம்மது அலி முகம்மது அகீப் (10 வயது) அக்கரைப்பற்று நகர் பிரிவு 5, டீன்ஸ் வீதியை சேர்ந்தவர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- உயிரிழந்த சிறுவனும் அவரது குடும்பத்தினரும் அக்கரைப்பற்றில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை பகல் சாப்பாட்டுக்கு சென்றுள்ளனர்.
பகல் சாப்பாடு முடிந்து வான் சொந்தக்காரர் ஒருவர் அங்கிருந்து சிறுவர், சிறுமியர் 8 பேரை அழைத்துக் கொண்டு வானில் அட்டப்பளம் சென்று அங்கு உல்லாச விடுதியின் நீச்சல் தடாகத்தில் சில சிறுவர்கள் குளித்துள்ளனர். இதன் போது குளித்த அகீப் என்ற சிறுவன் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வியாழன் இரவு அக்கரைப்பற்று முஸ்லிம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
Inna lillahi wa inna ilayhi raji'un.!
ReplyDelete