பிலிப்பைன்ஸ் பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மரணம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள போஹோல் தீவில் நேற்று 7.2 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் போஹோல் தீவு மற்றும் அதன் அருகேயுள்ள சிபு மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டது.
போஹோல் தீவில் 7–வது நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதன கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்தன.
ரோடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு முடங்கின. மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
தொடக்கத்தில் 12 பேர் மட்டுமே பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இடிபாடுகளை தோண்டும் போது ஏராளமான பிணங்கள் மீட்கப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது.
போஹோல் தீவில்தான் அதிக அளவில் உயிர் பலி ஏற்பட்டது. பூகம்பத்தில் அங்குள்ள ஆஸ்பத்திரி மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து புதைந்தது. அதில் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 3 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment