Header Ads



Raisng of the Kiswa of the Kabaa

ஹஜ் பருவம் ஆரம்பமாவதையொட்டி புனித காபாவின் கிஸ்வா என அழைக்கப்படும் கறுப்பு போர்வையை ஒட்டி தரையிலிருந்து மூன்று மீற்றர் உயரத்திற்கு நேற்று முன்தினம் மறைக்கப்பட்டது. யாத்திரிகர்கள் தொடுவது மற்றும் சேதப்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கவே இவ்வாறு மறைக்கப்படுவதாக இரு புனித பள்ளிவாசல் தொடர்பான தலைமை அறிவித்துள்ளது. 

“இரண்டு மீற்றர் உயரத்திற்கும் 47 மீற்றர் அகலத்திற்கம் குறித்த பகுதி வெள்ளை ஆடையில் மறைக்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஹஜ் பருவத்தில் இவ்வாறு மறைக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. “இதை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மேற்கொண்டு வருகிறோம். யாத்திரிகர்கள் காபாவை வளம்வரும் போது (தவாப்) அதனை தொடுவதற்கு முயற்சிப்பார்கள்” என்று காபா போர்வை நிறுவனத்தின் பொதுச் செயலாளர் மொஹமத் பின் அப்துல் பஜுதா குறிப்பிட்டார்.











No comments

Powered by Blogger.