Header Ads



அரசு சிங்கள இனவாதத்தையும், தமிழ்த் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தையும் தூண்டுகிறது - JVP

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரிவினைவாதத்தையும், இனவாதத்தையும் தூண்டுகின்றது. அதேநேரம் , அரசாங்கம் சிங்கள இனவாதத்தை தூண்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஒருபக்க பிரிவினைவாதத்தையோ அல்லது இனவாதத்தையோ மறுதரப்பு இனவாதத்தால் தோற்கடிக்க முடியாது.

அதேபோன்று ஒருபக்க இனவாதத்தை மற்ற பக்க இனவாதத்தால் தோற்கடிக்க முடியாது. எனினும், அரசாங்கம் இன்று ஒரு பக்க இனவாதத்தை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தி அதனை மீண்டும் இனவாதமாக மாற்றுவதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். sfm

No comments

Powered by Blogger.