Header Ads



பௌத்த கொடியின் கீழ் ஒழிந்து சிங்கள வாக்குகளை பெற அரசு பாரிய முயற்சி - JVP

(மொஹொமட் ஆஸிக்)

இனவாதத்தை தூண்டி பௌத்த கொடியின் கீழ் ஒழிந்து சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இன்று 2013 09 14 மாலை கட்டுகஸ்தோட்டை நகரில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சற்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும். பொருட்களின் விலைவாசியை குறைதத்தற்காக வாக்களிப்பதென்றால் அரசு அவ்வாரு செய்யவில்லை. விவசாயிகளுக்கு எவ்வித நன்னைகளையும் செய்ய வில்லை. அரச ஊழியர்களுக்கு தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்வித நன்மையையும் இவ் அரசு செய்யவில்லை. சமுர்த்தி உதவியை அதிகரிக்க வில்லை குழந்தைகளுக்கு நல்லதொரு பாடசாலை பெற்றுக் கொடுக்க  வில்லை. கிராம பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றது.

அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. அதனை மீள உருவாக்கவதற்கு அரசு பல உத்திகளை கையாளுகின்றது. அதில் ஒன்று தான் இனவாதத்தை தூண்டுவதாகும். பௌத்த கொடியில் ஒழிந்து வாக்குகளை பெருவதற்கு அரசு முயற்சிக்கின்றது. எங்கள் அனைவருக்கும் சமயம் ஒன்று உள்ளது. ஆனாலும் சமயத்தை தேர்தல் இலாபத்துக்காக பயன் படுத்த அனுமதிக்க கூடாது.

ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு இரண்டு கோடி ரூபாய் அரச ஊழியர் ஒருவருக்கு நாளைக்கு 25 ரூபாவே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்நிலையில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும். ஏன்றும் டில்வின் சில்வா இங்கு கேல்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.