தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தால் அரசாங்கத்திற்கே நன்மை - JVP
(vi) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசாங்கத்தின் இருப்பை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. யுத்த கோரத்தால் பாதிக்கப்பட் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கூட்டமைப்பினராலோ ஆளும் தரப்பினராலோ கிடைக்கப் பெறப்போவதில்லையென்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான பிரிவினைவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டும் வகையான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமையானது ஏற்றுக் கொள்ளக்கூடியதொன்றல்ல. அரசியல் இருப்பிற்காக அனைத்தையும் செய்து விட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தொடர்ந்தும் கூறுகையில்,
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டுள்ளது. வட மாகாணசபையின் தேர்தல் சர்வதேச நாடுகளினாலும் அவதானிக்கப்படுகின்றது. ஆனால் இத் தேர்தலானது நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலோ முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலோ அமைந்து விடக்கூடாது.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளும் கட்சி என்பன முன்னெடுக்கின்ற பிரசார நடவடிக்கைகளைப் பார்த்தால் நாடு பின்னோக்கி செல்வதாகவே அமைகின்றது.
கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தால் அரசாங்கமே நன்மை அடையப் போகின்றது. ஏனென்றால் ஆளும் கட்சி தனது தேர்தல் பிரசாரத்திற்கு தலைப்பொன்று இல்லாமற் தடுமாறிக் கொண்டிருக்கையில் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டும் வகையிலான விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. இதனை தெற்கில் சிங்கள மக்களுக்கு காட்டி மீண்டும் புலிகள் தோன்றும் அபாயம் உள்ளது. ஆகவே தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் எனக் கூறி பிரசாரம் செய்து அரசியல் இலாபம் ஈட்டும் சந்தர்ப்பம் தற்போது அரசிற்கு கிடைத்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் எவ்விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை என்று கூறினார்.

Post a Comment