இலங்கை பெண்களை சிங்கப்பூர் அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தும் தரகர்கள்
(Nf) தமது பணியகத்தில் பதிவுசெய்யாது சிங்கப்பூருக்கு தொழிலுக்கு செல்ல வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கைப் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைப் பெண்களை பல்வேறு தொழில்களுக்கு என சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று, விபசார தொழிலில் ஈடுபடுத்துவதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி இணைப்பதிகாரியுமான மங்கள ரன்தெனிய கூறினார்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட யுவதிகள் பலர் கடந்தகாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அடையாளங் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கு விசா இல்லாது, விமான பயணச்சீட்டுகளுடன் பயணிக்க முடியுமென்ற விடயத்தினை அடிப்படையாகக்கொண்டு சில தரகர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் இலங்கைப் பெண்கள் பலவந்தமாக விபசார தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
எனவே சிங்கப்பூருக்கு தொழில் நிமிர்த்தம் செல்லும் பெண்கள், தொழில்வாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் எதுவுமின்றி செல்ல வேண்டாமென பணியகம் வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூருக்கு சென்று, இவ்வாறான இன்னல்களை எதிர்நோக்கிய இலங்கைப் பெண்கள் தொடர்பில் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரக பிரிவுகள் ஊடாக கண்டறியவுள்ளதாக மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரப்படுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment