Header Ads



முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகல்..!


வடக்கில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதிலும்இஅதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு ஆதரவு வழங்க மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ரவூபிக் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினரான அரபாத் ஆகியோர் தீர்மாணித்துள்ளனர்.

தற்போது நாட்டில் உள்ள சூழ் நிலை மற்றும் வடக்கில் வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலேயே தாங்கள் தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இன்று புத்தளம் புளிச்சாக்குளத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே இவர்கள் அமைச்சரின் கரத்தினை பலப்படுத்துவதாக கூறினார்



No comments

Powered by Blogger.