நீர்கொழும்பில் கல்லூரி அதிபர், வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
(tm) நீர்கொழும்பு, சென்.மேரிஸ் கல்லூரி அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையின் மலசலக்கூடத்திலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பைச் சேர்ந்த மெக்செல் பெர்ணான்டோ (வயது 60) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டடுள்ளது. இவர், எதிர்வரும் நவம்பவர் மாதம் ஓய்வுபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment