மாணவர்கள் விபத்தில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கான செயற்றிட்டம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மாணவர்கள் விபத்தில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுத்துவருவதாக கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.
இத்திட்டம் குறிது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மைக்காலமாக மாணவர்கள் வீட்டுச் சூழலிலும் பாடசாலைகளிலும் மற்றும் புறச் சூழல்களிலும் விபத்துக்குள்ளவாது அதிகரித்துள்ளது.
மாணவர்கள் விபத்துக்குள்ளாய் காயப்படுவதைத் தவிர்க்கும்பொறுட்டு விபத்துக்களிலிருந்து மாணவர்கள் அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறிமுறையுடன் கூடியதான இத்திட்டம் மாவட்டம் தோரும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக வீதி விபத்துக்குள் வெடிக்கும் வெடி பொருட்கள், வீட்டு விபத்துகள், இடி மின்னல் தாக்கங்கள் போன்ற இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் இஸட்; தாஜுடீன் தெரிவித்தார்.
Post a Comment