அல்ஹைதாவிடம் ஏவுகணையை திசை திருப்பும் நவீன தொழில்நுட்பம்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தாகள் மீது அமெரிக்கா அடிக்கடி ஆள் இல்லாத விமானம், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆள் இல்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை அல்கொய்தாகள் உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா உளவுத்துறை சில எலக்ட்ரானிக்ஸ் சிக்னல்கள் குறுக்கிடுவதை கண்டுபிடித்தது. இது அல்கொய்தாகள் அனுப்பிய சிக்னல்கள் என்று தெரியவந்தது.
அமெரிக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் சிக்னல்கள் மூலம் தான் இயக்கப்படுகின்றன. அவற்றை தங்களது சிக்னல்கள் மூலம் வழிமறித்து திசை திருப்புவதற்காக அல்கொய்தாகள் புதிய சிக்னல் முறையை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பலுன்கள் மற்றும் சிறிய ரக ஆள் இல்லா விமானங்கள் ஆகியவற்றை அனுப்பி அமெரிக்க ஏவுகணை, ஆள் இல்லா விமானங்களின் சிக்னல்களை தடுத்து திசை திருப்பம் தொழில் நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் ஏவுகணை மற்றும் ஆள் இல்லா விமானங்கள் எதையும் பாதிக்க செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment