தேர்தல் ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 50 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மொத்தமாக 17 இலட்சத்து 54 ஆயிரத்து 218 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 50 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மொத்தமாக 17 இலட்சத்து 54 ஆயிரத்து 218 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இம் மாகாணத்திலுள்ள குருநாகல் மாவட்டத்தில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 810 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 26 ஆயிரத்து 408 பேரும் இவ்வாறு வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இம் மாகாணத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தமாக 1309 வாக்களிப்பு நிலையங்களும் 197 வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் 920 வாக்களிப்பு நிலையங்களும் 145 வாக்கெண்ணும் நிலையங்களும் புத்தளம் மாவட்டத்தில் 389 வாக்களிப்பு நிலையங்களும் 52 வாக்கெண்ணும் நிலையங்களும் இவ்வாறு இம் மாகாணத்தில் இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாக 709 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 653 வேட்பாளர்களும் என மொத்தமாக இம் மாகாணத்தில் 1362 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இம் மாகாண சபைக்குட்பட்ட குருநாகல் மாவட்டத்தில் 34 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள் சார்பாக 481 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 444 வேட்பாளர்களும் என மொத்தமாக 925 வேட்பாளர்களும் புத்தளம் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள் சார்பாக 228 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 209 வேட்பாளர்களும் என மொத்தமாக 437 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றுஹுனு மக்கள் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட குருநாகல் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் புத்தளம் மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் இம் மாகாணத்தில் போட்டியிடுகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெற்ற இம்மாகாண சபைக்கான தேர்தலில் இம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6 இலட்சத்து 68 ஆயிரத்து 743 வாக்குகளைப் பெற்று (69.43ம 2 போனஸ் ஆசனம் உட்பட 37 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2 இலட்சத்து 70 ஆயிரத்து 347 வாக்குகளைப் பெற்று (28.07மூ) 14 ஆசனங்களையும். மக்கள் விடுதலை முன்னணி 20 ஆயிரத்து 428 (2.12மூ) வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
2009 ஆம் ஆண்டு அன்று இம் மாவட்டத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தும் 10 இலட்சத்து 9 ஆயிரத்து 860 பேர் மாத்திரமே தமது வாக்குகளை அளித்திருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 714 (4.63மூ) பேர் அளித்த வாக்குகள் செல்லுபடியற்றவை என நிராகரிக்கப்பட்டன.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தவர்களை விட இம் முறை இம் மாகாணத்தில் 92 ஆயிரத்து 485 பேர் புதிதாக வாக்களிப்பதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 55 ஆயிரத்து 929 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 556 பேரும் இவ்வாறு இம் முறை இம்மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிதாகத் தகுதி பெற்றுள்ளனர்.
Post a Comment