Header Ads



ஜனாதிபதி மகிந்த அமெரிக்கா செல்கிறார்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

68வது பொதுச்சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள அவர், அதில்  உரையாற்றவிருப்பதாக ஜனாதிபதி ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உடன் செல்கிறார்.

No comments

Powered by Blogger.