தேர்தல் கண்காணிப்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்காக எதிவரும் 21 ஆம் திகதி நடாத்தப்படுகின்ற தேர்தலின்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தெற்காசிய தேர்தல்கள் முகாமைத்துவ அமைப்புக்களின் ஒன்றியம், மற்றும் பொது நலவாய செயலாளர் நாயகம் அலுவலகம் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களுக்கு இன்று 13 ஆம் திகதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய தேர்தல்கள் முகாமைத்துவ அமைப்புக்களின் ஒன்றியத்தின் தற்போதய தலைவரான இந்திய தேர்தல்கள் ஆணையத்தின் தலைவரினால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல்கள் முகாமைத்துவ அமைப்புக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் முகவர்கள் 20 பேரைக் கொண்ட குழுவொன்றைப் பெயர் குறித்துள்ளதோடு அதன் தலைவராகக் கடமையாற்றுவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணையத்தில் கடமையாற்றிய பிரதம தேர்தல்கள் ஆணையாளர் என். கோபாலசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் அலுவலகத்தின் செயலாளரினால் கென்யா குடியரசின் முன்னாள் துணை ஜனாதிபதி ஸ்டேபன் கலொன்சு முஸ்யொகா தலைமையின் கீழ் கண்காணிப்பாளர்கள் நால்வர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இக் கண்காணிப்புக் குழுக்கள் 14 ஆம் திகதி நாட்டுக்குள் வருகை தரவுள்ளனர்.
தெற்காசிய தேர்தல்கள் முகாமைத்துவ நிறுவனங்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்காணிப்பாளர்கள் வட மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் நிருவாக மாவட்டங்களான யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ வவுனியா மற்றும் மன்னார் ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இக் கண்காணிப்புக் குழுவிற்கு வட மாகாணத்திற்காகப் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் உள்நாட்டுக் கண்காணிப்புக் குழுவினர் ஆகியோர்களைக் கொழும்பில் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதோடுஇ கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னர் அவர்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் ஊடக நிறுவனங்களின் முகவர்களையும் சந்திப்பதற்கு தேவையான ஒழுங்குகளும் செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இது வழமையாக நடைபெற்றுவரும் தேர்தல் கால கண்காணிப்பு ஊர்வலமாகவோ அல்லது சுற்றுப்பயணமாகவோ இம்முறையும் அமைந்து விடக்கூடாது என இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஇவர்களின் கண்காணிப்பு என்பது 'கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கொண்டு' மிகவும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக வாக்கெண்ணும் நிலையத்தில் இவர்களின் அவதானிப்பு முக்கியம். ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்தும் கிடைக்கப் பெறுகின்ற வாக்களிப்பு விபரங்களின் பிரதிகளை இவர்களுக்கும் தேர்தல் ஆணையாளர் கையளிக்க ஏற்பாடு செய்தல் அவசியம்.
இவ்வாறு கையளிக்கப்பட்டால் மாத்திரமே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது 'திடீரென உட்புகுத்தப்படும் கள்ள வாக்குத் தொகையை' இவர்களால் கண்காணித்து அறிக்கையிட முடியும்.
இல்லாவிட்டால் கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றதைப் போன்று தோற்றுப் போன வேட்பாளர்கள் பலரும் திடீரென அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற வெற்றியாளர்களாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு விடுவார்கள்.
(உதாரணம்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர் அமீரலியைப் பின் தள்ளி முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரன் பிள்ளையான் முன்னணிக்கு வந்தது போல)
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-