அக்கரைப்பற்று ஹிவோ கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி (படங்கள்)
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று ஹிவோ கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று (19.09.2013) அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவில் இடம்பெற்றது. கல்லூரியின் பணிப்பாளர்களான ஏ.எஸ்.எம். ஹஸ்பி, ஏ.ஜி.எம். அஹ்சன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும், கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அதிகளாக முன்பள்ளி கல்விப்பணியகத்தின் பணிப்பாளர் ஏ.எல்.எம்.இப்றாகீம், அக்கரைப்பற்று பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.பௌஸ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எச்.ஜெய்னுடீன், ஆசிரியர் எம்.எச்.ஹாறூன் ஆகியோரும் கலந்து கொண்டு சான்றிதழ்களையும், கிண்ணத்தையும் வழங்கிவைத்தார்கள். அத்துடன் சிறுவர், சிறுமியரின் தாய், தந்தை மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment