Header Ads



ஐக்கிய தேசிய கட்சி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்..!

(Sfma + Adt) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், கட்சியின் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்சமயம் வெற்றிடம் நிலவும் பிரதான பதவிகள் சிலவற்றிற்கு வெகுவிரைவில்ஸ புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைகள் சில எதிர்வரும் 7 ஆம் திகதி இடம் பெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக 27 தேர்தல் தோல்விகளை கண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் விரைவில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி கட்சியின் இளைய உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கட்சியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியாகும் செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணம், உடனடியாக அமுலாகும் விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான கருஜயசூரிய அக்கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

அதற்கான ஆவணங்கள் நேற்று (25) கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கு ஏதுவான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே கருஜயசூரியவை செயற்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நீண்டகாலமாக பிரதித் தலைவராக உத்தியோகபூர்வமாக செயற்குழுவில் அங்கத்தவராக இருந்த கருஜயசூரிய அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, செயற்குழுவின் உறுப்புரிமையும் அவருக்கு இல்லாது போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் அடுத்து மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளன. 

இம்மாகாண சபைகளில் வெற்றிவியூகத்தை வகுக்கவென ஐக்கிய தேசிய கட்சிக்குள் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அதாவது மேல் மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கரு ஜயசூரியவையும் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவையும் ஊவா மாகாண முதலமைச்சராக ஹரேன் பெனாண்டோவையும் நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த யோசனை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

எதிர்வரும் 7ம் திகதி நடைபெறும் செயற்குழு கூட்டம் அல்லது அதன் பின்னர் இடம்பெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளனர். 

2 comments:

  1. first change the leader ship every things will be alright.he lost 31 times.

    ReplyDelete
  2. First change all position include Leader ship in the UNP no need or no use of changing positions. Why Ranil want to stay as a o/leader until die, He is killing the Party for ever.
    we will never support any time same this result will continue if u r in the same position.

    ReplyDelete

Powered by Blogger.