தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி அரசியல் மட்டும்தான் செய்ய தெரியும் - ராஜித சேனாரத்ன
இலங்கைக்கு வருகைத் வருகைத்தந்த நவநீதம் பிள்ளைஇஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் துரித அபிவிருத்திகளை பாராட்டியுள்ளதானது இந்த நாட்டு மக்கள் ஜனநாயகமாக வாழ்வதை எடுத்துக் காட்டுவதற்கான அங்கீகாரமாக கடற்றொழில் மற்றும் நீரியள்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மன்னாரில் கூறினார்.
கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இன்று மன்னார் மாவட்டத்துக்கு வருகைத்தந்து மாவட்ட மீனவ சமூகப் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோதை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துரைக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று சமாதான சூழ் நிலையினை எற்படுத்தி தந்துள்ளார்.அதனை தக்க வைத்துக் கொள்வது எமது கடப்பாடாகும்.இன்று சமாதானம் ஏற்படாத நிலை இருக்குமெனில் புலிகள் இந்த மக்களை அடக்கி ஆண்டிருப்பார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மக்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இல்லை.இந்த மக்களுக்கு அரசாங்கம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டுவருகின்ற அபிவிருத்தி பணிகளை மக்கள் அனுபவிக்க விடாது செய்வதே இவர்களது வேலைஇஇந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவதானது இந்த மாவட்ட மக்களது அபிவிருத்திக்கு பெரும் இழப்பாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட மீனவ சமூகத்தின் மேம்பாடுகளுக்காக இந்த அரசாங்கம் இதுவரைக்கும் 33 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது.இன்னும் சில தினங்களில் பேசாலை மற்றும் சிலாவத்துறை பிரதேசங்களில் மீனவ மக்களது நலன்கருதி புதிய இரு மீனவ துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளது.
அதே போல் வடக்கில் இன்று 80 சதவீதமான பகுதிகளுக்கு மின்சாரம் சென்றுள்ளது.எஞ்சிய கிராமங்களுக்கும் அவற்றை பெற்றுக் கொடுக்கும் பணிகளை அரசு முன்னெடுததுள்ளது. என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
Post a Comment