போரை விரும்பவில்லை. நாங்கள் அதற்கு தயாரும் இல்லை - ஈரான் ஜனாதிபதி
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெரும் துரோகம் செய்து விட்டது இஸ்ரேல். அமைதியின்மைக்கு காரணமே அந்த நாடு தான்’ என்று ஈரான் அதிபர் ஹசன் ரோஹானி ஆவேசமாக கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிபரானதும் அமெரிக்க என்பிசி சேனலுக்கு அவர் அளித்த முதல் பேட்டி,
மத்திய கிழக்கு நாடுகளும் அதன் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் என் முழு விருப்பம்; எண்ணம். ஆனால், அதை தன் பிரித்தாளும் கொள்கையால் இஸ்ரேல் அந்த எண்ணத்தில் மண்ணை போட்டு விட்டது பல ஆண்டுக்கு முன்னால்.
நான் அரசில்வாதி; எனக்கு முக்கியமானது என் நாடு; மக்கள்; எங்கள் பொருளாதாரம்; அதன் வளர்ச்சி. முதல் நோக்கம் நாட்டு மக்கள் ஒற்றுமை. அதுபோல எங்களின் மத்திய கிழக்கில் ஒற்றுமை. அப்படி இருந்தால் தான் எங்கள் வளர்ச்சி எல்லாம் ஒருசேர இருக்கும். எங்களுக்கு போர் தேவையில்லை. ஈரான் போரை விரும்பவில்லை. நாங்கள் அதற்கு தயாரும் இல்லை.
இஸ்ரேலுக்கு இந்த மத்திய கிழக்கில் அமைதி தொடர விருப்பமில்லை. அதன் அதிபர் நாடென்யஹு ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அமைதி தான் முக்கியம் என்று மற்ற நாடுகள் உணர வேண்டும். ஈரானில் மக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. நான் கண்டிப்பாக சமூக, கல்வி, பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தருவேன். மக்கள் அமைதியாக வாழ்வதுடன், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்துக்கும் மதிப்பளிப்பேன். இன்டர்நெட் மீதான கட்டுப்பாடு நீக்கப்படுமா என்று இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. ஆனால், மக்களின் அடிப்படை தேவை, விருப்பம் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்படும்.
உலகின் அத்தனை தகவல் தொடர்புகளும் ஈரான் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் நான் முழு உறுதியுடன் இருக்கிறேன். அதை தடுக்க மாட்டேன். அணு ஆயுத திறன் விஷயத்தில் ஈரான் முழு தன்னிறைவு அடைந்துள்ளது. அதற்காக, மனித சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் எந்த பேரழிவுக்கும் நாங்கள் துணை போக மாட்டோம். இவ்வாறு ஈரான் அதிபர் ஹசன் ரோஹானி கூறினார்.

Post a Comment