புத்தளம் மன்னார் வீதியிலுள்ள கலா ஓயாப் பாலம் திருத்தப்படுமா..?
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ளது கலாஓயா இதற்காக உயரம்; குறைந்த ஒடுங்கிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் இரு மருங்கிலும் எவ்வித பாதுகாப்புத்தடையும் இல்லை. சில டொல்பின் ரக வாகனங்கள் நேரடியாக ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவங்களும் உண்டு.இதற்கருகில் கடற்பபடை முகாம் ஒன்று உள்ளது.அவர்கள் இப்பிரதேசத்தை உல்லாசப்பயணிகளைக் கவரும் வகையில்; வடிவமைத்துப் பேணிப்பாதுகாத்து வருகின்றனர்.இதில் பயனிப்போர் குளுமையையும்,ஒரு வகை இன்ப உணர்வையும் பெறுகின்றனர்.அவ்வளவு ரம்மியமான பிரதேசம் இது.
இப்பாலம் பழமையானதாக உள்ளதால் இதனூடாக வரும் பயணிகள் பேரூந்தை விட்டு இறங்கி நடந்து செல்லவேண்டி உள்ளது.பேரூந்து வெறுமையாக பாலத்தைத் தாண்டுகிறது.இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்..அது மட்டுமன்றி மழை அதிகம் பெய்தால் நீரின் மட்டம் பாலத்திற்கு மேலால் பல அடிகள் உயரத்தில் ஓடுகிறது.இவ்வேளை இதனூடான போக்குவரத்து மூடப்படுகிறது.இச்செயற்பாட்டால் விரைவாகவும்,குறைந்த செலவிலும் செல்லும் மன்னார் மாவட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் விரைவாக இங்கு பாதுகாப்பான,அகன்ற,உயரமான பாலம் அமைக்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும், ஜனாதிபதியின் புதல்வரும்,பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய நாமல் ராஜபக்ச அவர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.ஏனெனில் புத்தளத்துடன் தொப்புள் கொடி உறவுபோன்ற இவ்வீதியைத் திறந்து எமது போக்குவரத்தை இலகு படுத்தியது இவர்கள் இருவருமே என்றால் மிகை இல்லை.
Post a Comment