கம்ப்யூட்டர் கோளாறு - இலவசமாக விற்கப்பட்ட விமானப் பயண சீட்டுகள்
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகக் கருதப்படும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள முன்பதிவுப் பிரிவில் கடந்த வியாழன் அன்று கம்ப்யூட்டர் இணைப்புகளில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அன்று பதிவு செய்த பயணச்சீட்டுகள் பணம் எதுவும் பெறாமலும், மிகக்குறைந்த அளவிலான தொகையிலும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தவறு ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனம் தற்காலிகமாக விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. இதுபோல் விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கையையோ, அதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட செலவையோ அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால்,தவறுதலாக விற்கப்பட்டபோதிலும் பயணிகள் அதே கட்டணத்தில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நேற்று விமான நிறுவனம் தங்களது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளது.
பயணிகள் அந்நாட்டின் பாதுகாப்புக் கட்டணமான 5-10 டாலரை செலுத்தினால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுவாக ஒவ்வொரு பதிவாக முடிவு செய்யும் நிர்வாகம், இந்தமுறை சூழ்நிலைக் காரணங்களைக் கொண்டு அனைத்து பயணிகளுக்கும் அதே சலுகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

Post a Comment