வடமாகாண தேர்தல் கடமைகளில், அம்பாரையிலிருந்து சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் குழு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஏதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்டும் பொருட்டு அம்பாரை மாவட்டத்திலிருந்து சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
உதவிதெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 75 பேரும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 50 பேருமாக மொத்தம் 125 உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் வியாழக்கிழமை 2013.09.12 அம்பாரை மாவட்டசெயலக கூட்டமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான கடிதங்களை யாழ் மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் அம்பாரை உதவித்தேர்தல்கள் ஆணையாளர் ஊடாக உரியவர்களின் முகவரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார் காலை 9.00 மணிக்கு உதவிதெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் முற்பகல் 1.00 மணிக்கும்; பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரட்ண தெரிவித்தார்
Post a Comment