Header Ads



எருக்கலம்பிட்டி மண்ணில் முஸ்லிம் காங்கிரசை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது

கட்சி மாறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் அரபாத் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எருக்கலம்பிட்டி கிளை செயலாளர்  ஷாஹீன் றிஷா தனது அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மர்ஹூம் அல்ஹாஜ் நூர்டீன் மசூர் பிறந்த எருக்கலம்பிட்டி மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை எந்த கொம்பனாலும் அழிக்கவோ அசைக்கவோ முடியாது. கடந்த பிரதேச சபைத்தேர்தலில் எருக்கலம்பிட்டி மக்கள் வகுத்த வியூகங்கத்தினாலும், சாணக்கியத்தினாலும் சகோதரர் அரபாத் அவர்களை மன்னார் பிரதேச சபை உருப்பினராக தெரிவு செய்தோம்.

ஆனால் அவர் தற்பொழுது தனது சுயலாபத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சேர்ந்து கொண்டு கட்சியையும் அவரின் வெற்றிக்காக பாடுபட்ட மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்காமல் செயற்பட்டுள்ளார்;.

இவர்கள் போன்ற அடிவருடிகளின் செயற்பாட்டினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி தற்பொழுது மென்மேலும் எழுச்சி பெற்று வருகின்றது.  

மேலும் எருக்கலம்பிட்டி மக்களின் ஒற்றுமையினாலும் வாக்கு பலத்தினாலும் இன்சா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பல அரசியல்வாதிகளை உருவாக்கமுடியும் என்பதனை தெறிவித்துக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.