Header Ads



நீச்சல் பயிற்சியில் முஸ்லிம் மாணவிகளுக்கு சலுகை அளிக்க முடியாது - ஜெர்மன் நீதிமன்றம்

பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி வகுப்பில் கட்டாயம் சேர வேண்டும் என்று ஜெர்மன் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜெர்மன் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆண் - பெண் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி பெறுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெர்மன் மேற்கு மாநிலம் ஹெஸ்ஸை சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றங்கள், 'முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தன. இதையடுத்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், 

பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் நீச்சல் பயிற்சி பெறுவதில் விலக்கு அளிக்க முடியாது. உடல் முழுவதும் மறைக்க கூடிய நீச்சல் உடை அணிந்து பயிற்சி பெறலாம்' என்று கூறியுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்று பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவுகிறது. இதுகுறித்து ஜெர்மன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் அய்மென் மாஸ்யெக் கூறுகையில், 'உடல் முழுவதையும் மறைக்க கூடிய நீச்சல் உடையை இஸ்லாம் ஏற்று கொள்கிறது. அதேநேரத்தில் தனிப்பட்ட வகையில் ஒருவருடைய மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்றார்.

1 comment:

  1. You can not find fragrance in toilet pits.

    You batter come out of this mixed school and get educated institution that has a sense of human rights.

    You can also initiate Islamic schools in the country you live.

    ReplyDelete

Powered by Blogger.