வேட்பாளர் சிராஸின் காரியாலம் மீது தாக்குதல் (படங்கள்)
(பாறூக் சிகான்)
வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சிராஸின் மக்கள் தொடர்பு காரியாலம் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மெற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் பல்சர் ரக மொட்டார் வண்டியில் வந்த இருவர் தம்வசம் வைத்திருந்த வாளினால் சிராஸின் ஓட்டுமடம் பழம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தின் முன்னால் இருந்த அவரது விளம்பர பலகையை வெட்டியதுடன் அலுவலக மின்குமிழையை சேதமாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அறிந்து அவ்விடம் வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக வேட்பாளரிடம் கேட்கப்பட்டபோது எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எம்மீது சிலர் இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டு அச்சுறுத்த முயல்வதாக தெரிவித்தார்.
மேலும் தாக்குதல் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர ஏற்கனவே மற்றுமொரு அலுவலகம் பொம்மைவெளி பகுதியில் சேதமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட அரசியல் ஆதரவு தேடும் பிரச்சார முயற்சியாகவும் இருக்கலாம்!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ஆம் புவி ரஹ்மத்துல்லாஹ் சொன்னது தான் சரி என்று நினைக்கிறேன்
ReplyDeleteநிச்சயமாக அதுதான் உண்மை.
ReplyDeleteதான் தோழ்வியுற்று தன்னால், தனது அடியாட்களால் பேனர்கள் கலட்டப்படுவதற்கு முன் தானே அதனைச் செய்து வெற்றி பெற நினைக்கிறார்.