நான் அல்குர்ஆனை முழுமையாக வாசித்துள்ளேன் - பிரதமர் ஜயரத்ன
(JM.Hafeez)
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொருவரும் தனிநபர் பற்றிச் சிந்திக்காது நாடு பற்றிச் சிந்தித்தே வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். (3.9.2013 இரவு) மடவனை சந்தியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி பொதுமக்களுடன் பொதுமக்களாக அவர் இணைந்து கொண்டதுடன் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீண்டகாலமாக எனக்கும் முஸ்லிம்மக்களுக்குமிடையே தொடாபுண்டு. காரணம் நான் வாழ்ந்த மூழல் முஸ்லிம் சூழலாகும். நான் சிறுவனாக இருக்கும் பொழுது முஸ்லிம் சிறுவர்களுடன் விளையாடுவேன். களைப்பு வந்ததும் நான் அருகில் உள்ள பள்ளியில் தூங்கி விடுவேன். பள்ளியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவரே என்னைத் தூக்கிக் கொண்டு போய் வீடடில் ஒப்படைப்பார். நான் நாட்டின் பிரதமராக வருவேன் என்பதை அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை. நான் திருக்குர்ஆனை முழுமையாக வாசித்துள்ளேன். அதன் நல்ல கருத்துக்களைப் புரிந்து வைத்துள்ளேன்.
நடைபெறப்போகும் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கை சர்வதேசம் அவதானிக்கப் போகிறது. எனவே நாம் எமது நாட்டைப் பற்றி சர்வதேசத்திற்குச் சொல்லும் ஒரு செய்தியாவே தெர்தலில் வாக்களிக்கவேண்டும். இங்கு தனி நபரையோ தனிக்கடசியையோ நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் நலநன கவனத்திற்கொண்டு அரசின் செயற்பாடுகளயும், வேலைத்திட்டங்களையுமத் அங்கீகரப்பதாக எமது வாக்குகள்இருக்க வேண்டும்.
இலங்கையில் யுத்தகாலத்தில் எத்தனை முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். இது பற்றி நவநீதன் பின்னை எதுவும் கூறவில்லை. ஆனால் ஏதோ ஐந்து ஆறு பேர் பற்றி மட்டும் பெரிதாகப் பேசுகின்றார். மீலாத் விழாக்காலங்களில் முஸ்லீம் களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற அடிப்படையில் வருடாவருடம் 400 இலட்சம் ரூபாய் வரையில் ஒதுக்கிக் கொடுக்கிறோம். அமைச்சர் அஷ்ரப் இற்கு முக்கிய ஊக்குவிப்பு சக்தியாக நான் இருந்தேன்.
எமது பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் சிலர் இன்று கோடீஸ் வரர்களாக உள்ளனர். காரணம் நாம் அவர்களை ஈரான், ஈராக் போன்ற தேசங்களுக்கு அன்று அனுப்பி வைத்தோம். இன்று அவர்கள் சகல வசதிகளும் பெற்று வாழ்கின்றனர். இவ்வாறு நாம் பல வழிகளிலும் முஸ்லிம்களுக்கு சேவை புரிந்துள்ளோம். எனவே தனி நபர் பற்றி முடிவெடுக்காது நாடு பற்றி சிந்தித்து முடிவெடுக்கும்படி வேண்டுகின்றேன் என்றார்.
குர் ஆன் ஓதியது , பள்ளியில் தூங்கியது எல்லாம் தேர்தல் காலத்தில் மட்டும் தான் ஞாபகத்திற்கு வருகிறது . என்ன செய்ய வயசாகி விட்டது , யாழ்ப்பாணதிக்குப் போனால் சொல்லுவார் நான் கோயிலில் பார்ட் டைம் பூசாரி வேலை செய்தேன் என்று இதெல்லாம் தேர்தல் காய்ச்சல்
ReplyDeletemaakkal niyaya poali
ReplyDelete