அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு
சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அதிபர் வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
போதை வஸ்த்து பாவித்தல், அதனால் ஏற்படும் விளைவுகள், அதனை எவ்வாறு தடுக்க முடியும் போன்ற விடயங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.காலித் அவர்களினால் விரிவான விரிவுரைகள் இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் இடப்பாடவிதான பொறுப்பாசிரியரும் பிரதி அதிபருமான ஏ.எல்.பத்தஹ் அவர்களும் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
Post a Comment