சிறிய பிக்குமார் குழு பெளத்த சாசனத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றனர் - பத்தேகம சமித தேரர்
புத்த பகவான் தனது போதனையில் எந்த இடத்திலும் ஏனைய மதங்களை அவமதிக்குமாறு கூறவில்லை. எனினும் பெளத்த சாசனத்திற்குள் புகுந்துள்ள சிறிய பிக்குமார் குழு பெளத்த சாசனத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என "தர்மத்தின் குரல்" என்ற அமைப்பின் உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாண சபை உறுப்பினரான பத்தேகம சமித தேரர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெளத்த சாசனத்திற்குள் புகுந்துள்ள சிறிய குழுவினரான பிக்குகள் புத்த பகவான் போதித்துள்ள தர்மத்திற்கு புறம்பாகச் செயற்படுகின்றனர். இவர்களின் இச் செயற்பாடுகளால் பெளத்த மதம் சீரழிந்து வருகின்றது.
இதனால், நாட்டில் பெளத்த தர்மத்தின் உண்மையான போதனைகளைப் பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. அப்படியில்லை எனில் பெளத்த மதம் மேலும் சீரழிந்து போய்விடும்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நாட்டின் தலைவரான ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரலாற்றில் மன்னர்கள் இப்படியான பிரச்சினைகளில் தலையிட்டது போல் ஜனாதிபதியும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உங்களை போன்ற சிலர் இருப்பதனால் தான் கொஞ்ச நெஞ்ச மரியாதையாவது சிறுபான்மை மக்கள் பௌத்தர்களுக்கு அளிக்கிறார்கள், இல்லையேல் பௌத்தம் அழிந்து ரெம்ப நாள்
ReplyDelete