சிரியா விவகாரம்: ஒபாமா-புதின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் நேற்று தனியாக சந்தித்து பேசினார்கள்.
அப்போது சிரியா விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஆனால் சிரியா பிரச்சினையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.சந்திப்பு முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஷிய அதிபர் புதின்;
தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், இதயபூர்வமானதாகவும் இருந்தது என்றும், இருவரும் அவரவரது கருத்தில் உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறுகையில்; இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடம் பேச்சு நடத்தியதாகவும், என்றாலும் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாகவும் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், புதினுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை ஒளிவுமறைவின்றியும் ஆக்கபூர்வமானதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.சிரியா விவகாரத்தில் உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், சிரியா விவகாரம் குறித்து வருகிற 9-ந் தேதி அமெரிக்க மக்களுக்கு உரை நிகழ்த்த இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது, மாநாட்டில் கலந்து கொண்ட மற்ற நாடுகளின் தலைவர்களுடனும் சிரியா விவகாரம் குறித்து ஒபாமா ஆலோசனை நடத்தினார்.அப்போது பிரதமர் மன்மோகன் சிங், சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதா? என்பது பற்றி ஆய்வு செய்த ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வரும் வரை உலக சமுதாயம் காத்து இருக்க வேண்டும் என்றும், ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் அந்த நாட்டுக்கு எதிராக தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கை எடுப்பதை இந்தியா எதிர்க்கிறது என்று கூறியதாகவும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டெக் சிக் அலுவாலியா தெரிவித்தார்.

Post a Comment