Header Ads



‘மீண்டும் போர் ஏற்படக்கூடாது’ - சர்வ மதத்தினரையும் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா, பிரான்சு நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றன. எனவே எந்தநேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் போரை தடுத்து சுமுக தீர்வு ஏற்பட வழி காணும்படி உலக நாட்டு தலைவர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுவது போல ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றாலும், ‘மீண்டும் போர் ஒருபோதும் ஏற்படக்கூடாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் விடுத்த அறிக்கையில், இந்த விவகாரத்தில் சிரியாவில் அமைதி நிலவ வேண்டி உலகம் முழுவதிலும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் வருகிற 7–ந்தேதி பிரார்த்தனை நடத்த வேண்டும். அன்று வாடிகன் நகரில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் நான் பங்கேற்பேன். மக்கள் நலனுக்காக நடக்கும் இந்த பிரார்த்தனையில் மற்ற கிறிஸ்தவர்களும், சர்வ மதத்தினரும் பங்கேற்க அழைக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.