கல்பிட்டி மாம்புரி ரோமன் கத்தோலிக்க சிங்கள, தமிழ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப விஞ்ஞானகூடம்
(A.M Aslam)
மஹிந்த சிந்தனையின் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் மஹிந்தோதைய தொழில்நுட்ப விஞ்ஞானகூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கல்பிட்டி மாம்புரி ரோமன் கத்தோலிக்க சிங்கள, தமிழ் மகா வித்தியாலயத்தில் 18.09.2013ம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி பிரதேச சபைப் பிரிவுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளருமான அண்டனி விக்டர் பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மேற்படி ஆய்வுகூடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
பாடசாலை அதிபர் திருமதி என்.எம்.ஆர்.டீ. பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment