Header Ads



சிரியாவுக்கு இரசாயன ஆயுதங்களை விற்ற இங்கிலாந்து

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி சிரிய அரசு மீது அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகள் போர் தொடுக்க ஆயத்தமாகும் நிலையில், இரசாயன ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனங்களை சிரியாவுக்கு விற்க இங்கிலாந்து அனுமதித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் இரண்டாண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு சிரிய அரசுக்கு இரசாயன ஆயுதங்கள் தயாரிக்க தேவையான பொட்டாச்சியம் ப்ளோரைடு மற்றும் சோடியம் ப்ளோரைடு போன்றவற்றை ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வந்த நிலையில் சிரிய அரசுக்கு இரசாயனங்களை ஏற்றுமதி செய்தது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு இங்கிலாந்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. Inne

1 comment:

Powered by Blogger.