Header Ads



அஸ்மின் மௌலவிக்கு போனஸ் ஆசனம் உறுப்பினர் பதவி..?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் அஸ்மின் மௌலவிக்கு போனஸ் ஆசனம் உறுப்பினர் பதவி வழங்கப்படலாமென அறியவருகிறது.

இதனை உறுதிசெய்யும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உடன்படிக்கை விபரம் அமைந்துள்ளது. அதில் 8 ஆவது உடன்படிக்கை குறிப்பிடுவதாவது,

வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்டபாளர் பட்டியலில் மன்னார் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவு செய்யப்படாதவிடத்து நியமன முறை மூலம் அவரது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஸ்மின் மௌலவி மன்னாரில் போட்டியிட்டு வெற்றிபெறுவது சாத்தியமல்ல. அத்துடன் மாகாண சட்டங்களின் அடிப்படையில் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்குத்தான் தேசியப் பட்டியல் உறுப்பினர் வழங்கப்படலாம். வடமாகாண சபையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக ஆசனங்களை பெறும் கட்சிக்கே போனஸ் ஆசனம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Those who are contesting for election on Tnp must keep in mind that they playing with fire muslims should not trust these people and should not swallow the bait. what they really want is not the support of muslims but make more antagonize Sinhala Buddhist. thereby make more violence.

    ReplyDelete

Powered by Blogger.