கிழக்கு மாகாண முதலமைச்சர் புல்மோட்டைக்கு திடீர் விஜயம்
புல்மோட்டைப் பிரதேச பொது மக்களின் குடியிருப்பு மற்றும் பூர்வீக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவை மேற்கொள்ளப்பட்ட வேளை பொது மக்கள் சார்பாக நியாயம் கோரி மக்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் உதவித்தவிசாளர தௌபீக், ஜம்மியத்தியதுல் உலமா சபையினர் ஆகியோரை பொலிஸார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி 10ஆயிரம் ரூபா சதுரப்பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் உதவித்தவிசாளர் ஆகியோரின் இல்லத்திற்கு மாகாண முதலமைச்சர் திடிர் விஜயம் செய்து அவர்களின் நிலமைகளை கேட்டறிந்தவுடன் இது விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் எதிர் வரும் 24ம் திகதி இடம் பெறவிருக்கும் கிழக்கு மாகாண சபை அமர்வில் இது விடயமாக விரிவாக ஆராயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தாற்போல...............
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-