Header Ads



கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு..! (ஆதாரம் இணைப்பு)

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிரதேசங்களில் முறையற்ற விதத்தில் வரிகள் அறவீடு செய்யப் படுப்படுவதாகவும்  இதற்கு மாநகர ஆணையாளர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  பொது மக்கள் வேண்டுகோள்  விடுக்கின்றனர் .

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தை கல்முனை மாநகர சபை தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. எனினும் அந்த தனி நபரினால்  முறையற்ற கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. அத்தோடு  அறவிடப்படும்  பணதொகைக்கு பற்று சீட்டும் வழங்கப்படுவதில்லை. பற்றுசீட்டு கேட்டால் மட்டும்  மாநகர சபை  உறுதிப்படுத்தப்படாத  போலி பற்று சீட்டு வழங்கப் படுகிறது.

முச்சக்கர வண்டி ஒன்றுக்கு 30 ரூபாவும்  மோட்டார்சைக்கிள் ஒன்றுக்கு 20 ரூபாவும். பைசிக்கிள்  ஒன்றுக்கு 10 ரூபாவும் அறவிடப்படுகின்றன. இந்த கட்டணம் கல்முனை மாநகர சபையால் நிர்ணயம் செய்யப்படாத கட்டணம் என மாநகர சபை வருமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவ்வாறு குறித்த கட்டணம் அறவிடப்பட்டாலும்  மாநகர சபை ஆணையாளர் அல்லது கணக்காளர்  அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவருடைய  இலட்சினை பொறிக்கப் பட்ட பற்றுசீட்டாக  இருக்க வேண்டும் .

அவ்வாறில்லாமல்  மாநகர சபையின் அனுமதி இன்றி இந்த பற்று சீட்டு வழங்குவதால்  மாநகர சபை அதிகாரிகளுக்கும்  இந்த குத்தகை காரருக்கும் தொடர்புகள் இருக்கலாமா என்ற சந்தேகத்தை  கல்முனை ஆதார வைத்தியசாலை வாகன தரிப்பிட குத்தகை காரர் விடயத்தில்  ஊகிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை  மட்டக்களப்பு  போதனா வைத்திய சாலை முன்பாக  உள்ள வாகன தரிப்பிடத்தில் முறையாக கட்டணங்கள் அறவிடப் படுவதாகவும் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதித்த பற்று சீட்டு வழங்கப் படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு 20ரூபாவும்  மோட்டார் சைகள் ஒன்றுக்கு 10ரூபாவும் பைசிகள்  ஒன்றுக்கு 05ரூபாவும் அறவிடப்படுகின்றன.

No comments

Powered by Blogger.