கோத்தாவுக்கு நெருக்கமானவர் என தெரிவித்து மோசடிசெய்தவர் கைது
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது நெருக்கமானவர் என்று தெரிவித்து, அவர் மூலம் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 12 லட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவரை பொலிஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
61 வயதான இந்த நபர் நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் உட்பட பலரிடம் 2 லட்சம் ரூபா முதல் 5 லட்சம் ரூபா வரை மோசடியாக பெற்று பல இடங்களில் தலைமறைவாகி வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு கோட்டை உட்பட நாட்டில் சில பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இதுபோன்றவர்கள் பிடிபட்டதும் குற்றம் நீருபிக்கப்படுமிடத்து, அப்பிரதேசமக்கள் இவர்களை நையப்புடைந்த பின்னரே பொலிஸில் ஒப்படைக்கவேண்டும்.
ReplyDelete