Header Ads



இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை

முஸ்லிம்கள் சமாதானத்தை பாதுகாக்கவே விரும்புவதாக சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும், இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் அல் கய்தா அல்லது தலிபான்களுடன் தொடர்புகளைப் பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில், இலங்கையில் முஸ்லிம் கடும்போக்குவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். gtn

1 comment:

  1. இன்னம் கொஞ்ச நாளைக்குப்பிறகு இத்தகவலை சொன்னால் மிகவும் நல்லது. அவரவர் தனது சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளார்கள் என்பனதை அவரவர் வெளியிடும் செய்த்தியின் வேகமும் அச்செய்தியின் காரசாரமுமே வெளிக்காட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.