Header Ads



ஒருதேங்காயில் அபூர்வமான முறையில் பத்து கன்றுகள் (படங்கள் இணைப்பு)

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனை முஹைதின் ஜூம்மா பள்ளிவாயல் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சீனி முஹம்மது லேனில் வசிக்கும் எம்.ஐ.ஜெஸீமா பீவியின் வீட்டு தோட்டத்தில் நாட்டிய பல தேங்காயில் ஒருதேங்காயில் வழமைக்கு மாறாக மிகவும் அதிசயமான முறையில் பத்து கன்றுகள் முழைத்துள்ளது.

குறித்த அதிசய சம்பவம் தொடர்பில் வினவியபோது ஒரு தேங்காயில் 1 ஓன்று அல்லது 2இரண்டு அல்லது 3மூன்று தான் வருவதாகவும் அதற்கு கூடுதலாக வருவதில்லை என்றும் எங்களுடைய வீட்டில் நான் நாட்டிய 40 தேங்காயில் ஒரு தேங்காய்க்கு ஒன்று வீதம் 40 மரங்கள் முழைத்து பராமரிக்கப்பட்டுவருவதாகவும் அதில் ஒரு தேங்காய் போட்டுவந்த மரத்தில் மிக அதிசயமான முறையில் 10 கன்றுகள் முளைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் வீட்டு உரிமையாளரின் வீட்டுத் தோட்டத்தில் 17 பெரிய தென்னங்கன்றுகளும் 40 சிறிய கன்றுகளும் தற்போது வீட்டு உரிமையாளர் எம்.ஐ.ஜெஸீமா பீவி மற்றும் அவரின் தயார் கலந்தரும்மா எனும் 70வயது மூதாட்டி ஆகியோரினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

வல்ல இறைவனின் விசித்திரமான படைப்புக்குரிய அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.