Header Ads



ஓட்டமாவடி மீன் சந்தை மூடப்பட்டு டயர் எரிப்பு (படங்கள்)

(அனா)

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கும் ஓட்டமாவடி அல் மதீனா மீனவர் சங்க நிருவாகிகளுக்கும் இடையில் (26.09.2013) பிற்பகல் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் ஓட்டமாவடி அல் மதீனா மீனவர்களால் சந்தை மூடப்பட்டு கருப்புக் கொடிகள் கட்டப்பட்டு டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.
இங்கு தகரத்தினால் அடைக்கப்பட்ட இருபத்தாறு மீன் கடைகள் (ஐஸ்வாடிகள்) உள்ளன இவற்றை அகற்றி புரநெகும 2013 திட்டத்தில் நாட்பது கடைகள் கொண்ட நவீன மீன் சந்தை ஒன்றை அமைப்பதற்கு ஓட்டமாவடி பிரதேச சபை நிறுவாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் நவீன மீன் சந்தை அமைப்பது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே மீனவ சங்க உறுப்பினர்களுக்கும் பிரதேச சபை தவிசாளருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மீனவ சங்க உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில் அல் மதீனா மீனவர் அமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை வறுமாரு வந்த அழைப்பை ஏற்று தாங்கள் சென்றதாகவும் கூட்டத்தில் தவிசாளர் நவீன மீன் சந்தை அமைப்பத்கு தற்போது இருக்கும் கடைகளை அகற்றுமாறு கூறியும் ஏன் அகற்றாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது நாங்கள் கூறினோம் எங்களுக்கு பொறுத்தமான இடத்தை தாருங்கள் நாங்கள எங்களது இடத்தினை அகற்றுகிறோம் என்று கூறிய போது தவிசாளர் நீங்கள் நினைப்பதை எங்களால் செய்ய முடியாது என்று தகாத வார்த்தைகளால் கூறி எங்களுக்கு அடிக்க வந்தார் அதனாலயே எங்களது மீன் கடைகளை மூடி இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கருத்துத் தெரிவிக்கையில் புரநெகு 2013; திட்டத்தில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் நாட்பது கடைகளைக் கொண்ட நவீன் மீன் சந்தை ஒன்றை இருபது மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகளும் ஒப்பந்தக் காரர்களிடம் ஓப்படைக்கப்பட்டு விட்டது மூன்று மாதத்திற்குள் நவீன மீன் சந்தையின் வேளைகள் முடிவடைய வேண்டும் அதற்காக தற்போது மீன் கடைகளை வைத்துள்ளவர்களுக்கு தற்காலிகமாக மூன்று மாதத்திற்கு வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த இடம் எங்களுக்கு வேண்டாம் வேரு இடம் தாருங்கள் என்று கேட்டு மிகவும் மோசமன முறையில்  என்னை ஏசிவிட்டு சபையை விட்டு வெளியேறினார்கள் என்று அவர் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.