Header Ads



சம்மாந்துறையில் வினா விடைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு


(சுலைமான் றாபி) 

சம்மாந்துறை பிரதேச இளைஞர் யுவதிகளின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தல்’’ எனும் திட்டத்தின் கீழ்  சம்மாந்துறை றிபாத் நண்பர்கள் ஒன்றியம் நடாத்திய பொது அறிவு வினா விடைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டுதல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்ககளத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் அவர்களும் விஷேட அதிதிகளாக பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. றபீக் இஸ்மாயில், கலாச்சார உத்தியோகத்தர்களான எ.சுபைதீன், ஆசாத், சமாதான கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் மற்றும் அல்-ஹாஜ் எ.பி.மக்கீன் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியில் முதல் மூன்று  இடங்களைப் பெற்றவர்களுக்கு பணப்பரிசில்களும், 88 புள்ளிகளுக்கு மேல் எடுத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.இதேவேளை இந்த பொது அறிவுபோட்டியில் 52 பேர் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். 


No comments

Powered by Blogger.