Header Ads



பாலர் பாடசலை மாணவர்களுக்கான செயற்பாட்டு கல்விசார் செயலமர்வு


(ஏ.எஸ்.எம் - தானீஸ் எம்.எஸ். பைரூஸ்) 

The Global Fund for Children (GFC)  நிதியுதவியில் கிராமியப் பொருளாதாரமற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு (RECDO) ஏற்பாடு செய்திருந்த பாலர் பாடசலை மாணவர்களுக்கான செயற்பாட்டுடனான  (Activity Based Education) கற்றல் அணுகுமுறைகைள் செயலமர்வு 05.09.2013 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் 5.30 வரை கந்தளாய் இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறைக்கு வளவாளர்களாக கந்தளாய் வலயக் கல்வி அலவலகத்தின் பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமித்ரா வனசிங்கஹ  மற்றும் கந்தளாய் பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் டிலானி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்பயிற்சிப்பட்டறையில் கந்தளாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 பாலர் பாடசாலைகளில் இருந்து 60 மாணவமாணவிகளும் 10 ஆசிரியைகளும் கலந்து பயன் பெற்றுக் கொண்டனர். 


No comments

Powered by Blogger.