கல்முனை மாநகர சபை சுகாதார அதிகாரிகளே கண் திறப்பீர்களா..?
(ஏ.எல்.ஜுனைதீன்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாய விஸ்தரிப்பு நிலையத்திற்குப் பின்னால் உள்ள வயல் பாதையிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் மாடுகளினதும், கோழிகளினதும் கழிவுகள் நாளாந்தம் கொட்டப்படுவதால் இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றாடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சந்தைகளில் விற்கப்படும் கோழிகள் மற்றும் மாடுகள் என்பனவற்றின் கழிவுகள் இப்பாதையோரத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இப் பிரதேசத்தில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கட்டாக்காலி நாய்கள் இப் பகுதியில் பட்டியாகக் காணப்படுகின்றன. இந்நாய்க் கூட்டம் இக்கழிவுகளைக் கிளறிவிடுவதுடன் மாடுகளின் எலும்புகளைக் கெளவிக் கொண்டு ஓடி பல இடங்களிலும் போடுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.
இது மாத்திரமல்லாமல், இக் கழிவுகளைத் தேடி வரும் காகங்கள், கோழிகளின் குடல்கள், கால்கள் என்பனவற்றைக் கொத்திச் சென்று மக்கள் குடியிருப்பு பிரதேசங்களிலும் கிணறுகளுக்குள்ளும் போடுவதாகவும் இதனால் குடிநீர் அசுத்தப்படுவதாகவும் மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபை சுகாதார அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச பொதுச் சௌக்கிய பரிசோதகர்கள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நியாயமான கேள்வி ஆனால் நிட்சயம் பதில் கிடைக்கப்போவதில்லை
ReplyDeleteகல்முனை மாநகர சபை முதல்வர் குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் அதுமட்டுமல்ல சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியும் குறிப்பிட்ட குப்பைக்கிடங்குக்கு 300 மீட்டர் தூரத்தில் தான் அலுவலகத்தை வைத்துள்ளார் அது மட்டுமல்ல அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்
பதவி கிடைக்குமட்டும் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்றார்கள் முக்கியமான பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை .
முதல்வரிடம் சரியான கழிவு முகாமைத்துவ திட்டம் இல்லை என்பது இங்கு துல்லியமாக தெரிகின்ற ஒன்றாகும் மாட்டு மடுவம் ஒன்றை அமைத்துக்கொடுக்க முடியாத இயலாமையை என்னவென்பது
இந்த பிரதேச மக்களின் தலைவிதியை நோவதைத்தவிர வேறு வழி இல்லை.