மர்ஹூம் அஷ்ரப்க்கு, இந்த சமூகம் செய்யும் மாபெரும் துரோகம்
மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்து அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரால் அரசியல் முகவரிகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கான பயணத்தில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜெமீல் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
"மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மிகவும் இக்கட்டான் ஒரு சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கென ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுக் கொடுத்தது மட்டுமலாமல் இந்த சமூகத்தை நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் மாற்றியமைத்தார்.
அதன் மூலம் ஆட்சியின் பங்காளிக் கட்சியாகத் திகழ்ந்து அரசியல் அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு சமூகத்திற்குத் தேவையான பல்வேறு வேலைத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்தார்.
விசேடமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாக இருந்து கொண்டிருக்கிறது.
மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாம் தற்போது மேற்கொண்டு வருகின்ற தேர்தல் பிரசாரங்களின் போது அமமக்கள் எம்மிடம் அதனை நன்றியுடன் ஞாபகப்படுத்தி கூறுகின்றனர். இன்று நாம் ஓரளவு நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் செய்த சேவையின் பயனாகவே என்று அவர்கள் கூறுகின்ற போது- அது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகின்றது.
அவர் இன்று எம்மத்தியில் உயிருடன் இருந்திருப்பாரானால் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது முகவும் இலகுவாக- வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலுக்கு வந்து அமைச்சர்களாகவும் எம்.பி.க்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாகவும் மற்றும் உறுப்பினர்களாகவும் வேறு பல அரசியல் உயர் பதவி வகிக்கின்ற முக்கியஸ்தர்களாகவும் இருக்கின்ற பலர் அந்த மாபெரும் தலைவரை மறந்திருப்பதானது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அவரது நினைவு தினத்தன்று தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் துஆப் பிரார்த்தனைகளையும் விசேட நிகழ்வுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றது. இம்முறை தேசிய நிகழ்வை புத்தளத்தில் நடத்துகின்றது.
ஆனால் ஏனைய கட்சிகளிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் அவரது நினைவு தினத்தை கணக்கில் எடுக்காமல் புறக்கணித்து வருவதானது அவருக்கும் இந்த சமூகத்திற்கும் செய்யும் பெரும் துரோகம் என்றால் அது மிகையாகாது.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரை முகத்தில் புகழ்ந்து துதிபாடுவதை விட அவர் மரணித்த பின்னர் அவரது சேவைகளை நினைவு கூர்வதும் இளைய தலைமுறையினருக்கு அவரது சேவைகளை எடுத்துச் சொல்வதும் அவருக்காக துஆப் பிரார்த்தனை செய்வதுமே மனிதமும் தர்மமுமாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையினால் நம் எல்லோருக்கும் பெரும் தலைவரான மர்ஹூம் அஷ்ரப் அவர்களை இத்தருணத்தில் நினைவு கூர்வதுடன் மட்டுமலாமல் அவர் காட்டிய வழியில் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காகவும் இன்றைய பேரினவாத நெருக்கடி மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு பலமான சக்தியாக கூட்டிணைந்து செயற்படுவதற்கும் முன்வருமாறு அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

அஸ்ரப் அவர்கள் மரணித்து 13 வருடங்கள் ஆகி விட்டன. அவர் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு ஆற்றிய சேவைகள் வரலாற்றுப் பக்கமாக உள்ளதாகக் குறிப்பிடும் ஜெமீல், இப்போதும் வடபுல முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்திற்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற சாட்சியங்களையும் அந்த வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்.
ReplyDeleteவடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக அமைச்சர் அஷ்ரப் செய்தவற்றைப் புகழ்வது போல், அவரது அரசியல் பாசறையைப் பொறுப்பேற்ற நீங்களும், உங்களின் இன்றையத் தலைவரும் என்ன செய்துள்ளீர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை? சொல்லும் அளவுக்கு நீங்களெல்லாம் எதுவுமே செய்யவில்லையா?
தலைவரின் பெயரைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம் அரசியல் களத்தில் காலம் கடத்தும் நீங்கள் எல்லாம் எப்போது இவர் செய்தவை பொன்ற வரலாற்றுப்பக்க சாதனைகளையெல்லாம் செய்யப் போகின்றீர்கள்?
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் கட்சியைப் பொறுப்பேற்றுள்ள நீங்களே இன்று அவரது கொள்கைகள், கோட்பாடுகளை மறந்து 'திவி நெகும' மற்றும் 18வது திருத்தம் போன்ற சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்கும்போது, மாற்றுக் கட்சியிலுள்ள வர்கள் அவரை மறந்தது போனது பெரிய காரியமல்ல.
எமது காத்தான்குடியிலும் ஸ்ரீ.ல.மு.கா.வின் நகர சபை உறுப்பினர் ஒருவர் இருக்கின்றார். மத்திய குழு இருக்கிறது. என்றாலும் கடந்த கிழக்கு மாகாண சபைக் காலத்தில் ஊரெங்கும் ஒட்டப்பட்டவாறான ஒரு 'போஸ்டர்'மூட தலைவரின் படத்துடன் தெருக்களில் இல்லாமலிருப்பது கவலைக்குரியது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-