மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் அரபாத் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
(அபூ அஸ்ஜத்)
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உள்ள மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் அரபாத் வீட்டுக்குள் நுழைந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இன்று 20-09-2013 இரவு அரபாத்தின் எருக்கலம்பிட்டி வீ்ட்டுக்குள் நுழைந்த கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.வீட்டிலிருந்த பிரதேச சபை உறுப்பினர் அரபாத் காயங்களுக்குள்ளான நிலையிலும்இஅவருடன் மேலும் பலர் காயமுற்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்த எம்.அரபாத் இந்த மாகாண சபை தே்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியினை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டுவந்தார்.
தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வியுற்றதும், அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளார் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை எருக்கலம்பிட்டியில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், பொலீஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலீஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment