Header Ads



எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குள் அரசியலில் ஈடுபட தடை

(Tn) எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் அரசியலுக்கு தடைவிதிக்க நிர்வாக சபை ஒருமனதாக இணங்கியது என்று பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “பல்கலைக்கழக வளாகம் கல்வி பயிலும் இடமாகும். பல்கலைக்கழகம் அரசியல் மற்றும் கட்சி செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் இடமல்ல” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி பல்கலைக்கழகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த, அரசியல் மாநாடுகளை நடத்த மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க தடை விதிக்கப்படுகிறது என பல்கலைக்கழக தலைவர் ஒசாமா அல் அப்த் அனடொலு செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் தேர்தல்களில் அதிக இடங்களை வெற்றிபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.