Header Ads



நோயாளியோடு ஆம்புலன்சை திருடிச் சென்ற பலே திருடன்

அமெரிக்காவில் கார் திருடும் வாலிபர், நோயாளியோடு ஆம்புலன்சை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பிரியன் திமோதி காடா ஜூனியர் (25). இவர் கார்களை திருடுவதில் பலே கில்லாடி. இவரை பிடிக்க போலீசார் பலமுறை முயற்சி மேற்கொண்டும் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். போலீசாரின் கண்களுக்கும், கண்காணிப்பு கேமராக்களின் பார்வைக்கும் தெரியாமல் நைசாக கார்களை திருடுவதில் பிரபலமானவர் பிரியன் திமோதி. ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, பிரியன் திமோதியும் போலீசாரிடம் சிக்கினார்.

நேற்று முன்தினம் பிலடெல்பியா நகரின் நெரிசலான போக்குவரத்து சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு அவசரமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிக்னலில் சில வினாடிகள் நின்ற போது பிரியன் திமோதி துப்பாக்கி முனையில் ஆம்புலன்ஸ் டிரைவரை மடக்கினார். அவரை இறக்கி விட்டுவிட்டு ஆம்புலன்சை திருடி சென்றார். பின் சீட்டில் நோயாளி ஒருவர் இருப்பது பிரியன் திமோதிக்கு தெரியாது. உடனடியாக தகவல் அறிந்த போலீசார், நகர் முழுவதும் உஷார்படுத்தினர்.

போலீசார் துரத்தி சென்று ஆம்புலன்சை சுற்றி வளைத்தனர். அப்போது ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடியதில் உள்ளே இருந்த நோயாளி லேசாக காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி முனையில் பிரியன் திமோதியை போலீசார் மடக்கினர். எப்போதும் ஸ்டைலாக இருக்கும் பிரியன் திமோதி, போலீசிடம் இருந்து தப்பிக்க மொட்டை அடித்திருந்தார். பிரியன் திமோதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

No comments

Powered by Blogger.