Header Ads



"கண்டெடுக்கப்பட்டவை யாவும், எண்ணி முடிக்கப்பட்டவையே!" - கே.ஏ பாயிஸ்

(Mohamed Iflal மலேசியாவிலிருந்து)

 சற்று முன், புத்தள நகர முதல்வரும் அரசாங்கத்தின் புத்தளம் தொகுதி பிராதன அமைப்பாளருமான கே.ஏ பாயிஸ் அவர்களை, மலேசியாவிலிருந்து தொலைப்பேசி ஊடாக தொடர்புக் கொண்டப் பொழுது, கண்டெடுக்கப்பட்ட வாக்குச்சீட்டு  சம்பவம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

ஆளும்கட்சி வென்றெடுத்த புத்தளம் மாவட்டத்துக்கான போனஸ் ஆசனத்தை எம்.டீ.எம் தாஹிர் அவர்களுக்கு பெற்றெடுப்பதற்கான முனைப்பில், நேற்றையத் தினம் (24.09.2013) தாம் கொழும்பில் இருந்த வேலை இவ்வாறான சம்பவத்தை கேள்வியுற்றதாக கூறினார்.

சம்பவ இடத்திலிருந்த, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், பொதுமக்களும் தீர விசாரிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு அவசர அவசரமான செயற்பாடுகளை செய்துள்ளமை பற்றியும் அறிய முடிந்ததாக தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்பிற்கிணங்க பொலிசாருக்கு கையளிக்கப்படிருந்த சீல் பண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகளை, இன்று (25.09.2013) காலை பார்வையிட்டதோடு; மாவட்ட செயலாளர், புத்தளம் தேர்தல் பணிப்பாளர் மற்றும் புத்தளத்தின் பொலிஸ் பிரதி தலைமை ஆய்வாளர் (DIG ) கியோருடனும் ஏனைய அதிகாரிகளுடனும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.   

அது மட்டுமல்லாமல் வாக்கென்னும் ஸ்தலத்தில் காணப்பட்ட வாக்குச்சீட்டு கட்டுகள் மற்றும் வாகுச்சீட்டுகள் போதிகளில் இருந்தவாரான புகைப்படங்கள், மக்கள் குழுமியிருந்த  நேரம் எடுக்கப்பட்ட காணொளிகள் போன்றவற்றை தாம் பார்த்ததாகவும் கூறினார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் யாவுமே எண்ணப்பட்டு; வாக்கென்னும் மேற்பார்வை அதிகாரியால் கைய்யொப்பம் இடப்பட்டு; சரியான முறையில் பொதிகளில் இடப்பட்டு,  அவை மாவட்ட செயலகத்துக்கு கொண்டு செல்ல தாயார் நிலையில் இருந்துள்ளமைக்கான ஆதாரங்களை தாம் திரட்டியதாகவும் கே.ஏ பாயிஸ் அவர்கள் ஊர்ஜிதப்படுத்தினார். 
   
சம்பவம் நடந்த இரவில் முதல் இன்று காலை வரையிலும், இவ்விடயம் தொடர்பாக தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு, " கைவிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் யாவும் எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகள்தான்" என்ற ஆதாரமிக்க தெளிவானதொரு முடிவுக்கே தாம் வந்திருப்பதாகவும்; ஏனையவர்கள் இதனை தத்தமக்கு சாதகமான சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள முயன்றதாகதாகவும் குறிப்பிட்டு காட்டினார்.

"ஏனைய எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை  மாவட்ட செயலகத்துக்கு கொண்டு செல்லும் போது, இவை மாத்திரம்  தவறுதலாக கைவிடப்பட்டமையே, தேவையில்லாத, பூகாம்பரமான சம்பவமாக வெடித்து, பின்னர் ஓய்ந்து வருகின்றது"  எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

அதே போல,  இன்றையத் தினம் உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரில் சென்று கலந்துரையாடி; அவர்களுக்கும் இதனை விளக்கி கூறியதாகவும், போதிய ஆதாரங்களற்ற நிலையில் வருந்திக் கொள்வது தேவையற்றது எனவும், அவர்கள் எடுத்திருக்கும் முடிவானது நகரின் சீர்நிலைக்கு வீணாக பங்கம் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
   
ஆளுந்தரப்பின் வேட்பாளர்களான ரியாஸ், அசோகா வாடிகமங்கா, கமருதீன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களும் "எண்ணப்பட்ட வாக்குகள்தான் தவறுதலாக கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை" ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவர்கள்  நடந்துக் கொண்ட விதம் குறித்து மாவட்ட செயலாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளதையும் என்னோடு பகிர்ந்துக் கொண்டார்.  

இறுதியாக,  "நான் எடுத்திருக்கின்ற முடிவுக்கான ஆதாரங்கள் நூறு வீதமானவை, ஆனால் ஒரு வீதமான ஆதாரம் கூட எனது முடிவுக்கு எதிரானதாக இருக்கவில்லை" என தெரிவித்ததோடு, தாம் எடுத்துள்ள முடிவினை எதிர்த்து, பிழையாக விமர்சிப்பவர்கள் எடுக்கும் முடிவுக்கான ஆதாரத்தை நிரூபிக்குமாறு சவாலொன்றையும் விட்டுச்சென்றார்.

1 comment:

  1. திருடன் திருடும்போது அவன் தப்பிக்கக்கூடிய வழியையும் தயார் பன்னியே திருடுவான். இந்த ஆட்சியில் சொல்லும் எந்த கதையும் நம்பத்தகுந்தவை அல்ல. கதையால் வென்றவர்களே அரசியல் வாதிகள்.

    ReplyDelete

Powered by Blogger.