Header Ads



இஹ்வானுல் முஸ்லிமீன் முன்னணி தலைவர், ஸப்வாத் கலீல் சிறையில் மரணம்!

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஸாஃப்வாத் கலீல் சிறையில் வைத்து மரணமடைந்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலீல், தனது 59-வது வயதில் மரணமடைந்துள்ளார். எகிப்தில் முதன் முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியை ராணுவ சதிப் புரட்சி மூலம் கவிழ்த்த சர்வாதிகார ராணுவம், ஜனநாயக படுகொலையை எதிர்த்து மக்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வருகிறது.

மேலும் இஃவான்களின் தலைவர்களை,போராட்டத்தை தூண்டினார்கள் என்று குற்றம் சாட்டி கைதுச் செய்து சிறையில்அடைத்தது.அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீனின் முன்னணிதலைவர்களில் ஒருவர் தாம் டாக்டர் ஸஃப்வாத் கலீல்.கலீல் மற்றும் 48 சககைதிகளையும் நீதிமன்றம் கடந்த வாரம் விடுதலைச் செய்தது.ஆனால், அவர்கள் சிறையில் இருந்து விடுதலைச் செய்யப்படவில்லை.கலீலின் மரணத்தை உறுதிச் செய்த இஃவானுல் முஸ்லிமீன், அவரது மரணத்திற்குகாரணம் ராணுவ அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளது.கலீலை சிறையில்இருந்து நீதிமன்றத்திற்கு போலீஸ் ட்ரக்கில் கொண்டு சென்றுள்ளனர்.இதனால் அவருடைய் உடல்நிலை சீர்கெட்டது என்று இஃவான் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். Thoo

No comments

Powered by Blogger.