ஜோர்டான் பாராளுமன்றத்தில் தகராறு - துப்பாக்கியால் சுட்ட எம்.பி. கைது
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் எம்பி மீது துப்பாக்கியால் சுட்ட மற்றொரு எம்பியை போலீசார் கைது செய்தனர். ஜோர்டானில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோர்டான் தலைநகரான ஏமனில் நாடாளுமன்ற கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க தலால் அல் ஷெரீப், குஷே அல் டாமிஸி உள்பட எம்பிக்கள் பலர் வந்திருந்தனர். பாராளுமன்ற சேம்பரில் எம்பிக்கள் ஷெரீப், டாமிஸி ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் டாமிஸி கூட்ட அரங்கிற்கு போய்விட்டார். அப்போது கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த ஷெரீப், டாமிஸியை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டு குறி தவறியது. இதில் டாமிஸி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் நாடாளுமன்ற கூட்ட அரங்கில் இருந்தவர்களும் காயம் இன்றி தப்பினர். அங்கிருந்த சபை காவலர்கள் எம்பி ஷெரீப்பை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். ஷெரீப் மீது போலீ சார் கொலை முயற்சி, உரிமம் பெறமாமல் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். நாடாளுமன்றத்தில் தகராறு செய்தது தொடர்பாக எம்பி குஷே அல் டாமிஸியும் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தை படம்பிடிக்க வந்த செய்தி சேனல்கள் அங்கு நடந்த இந்த சம்பவத்தை படம் பிடித்து ஒளிபரப்பின.
Post a Comment